தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வங்கி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிவு

வங்கி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிவு

வங்கி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : ஜூலை 24, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2024 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : கே.ஆர்.பாளையத்தில் தனியார் வங்கி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 44; தனியார் வங்கி ஊழியர்.

இவர் தனது மகன்கள் காதணி விழாவை முடித்துக் கொண்டு, கடந்த 21ம் தேதி இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்ததார்.

அப்போது, சாலையோரம் நின்றிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த நவீன், 25, அவரது நண்பர் அஜித் ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஜெயச்சந்திரனைப் பார்த்து திட்டி உள்ளனர்.

இதனை ஜெயச்சந்திரன் கண்டித்தபோது, கோபமடைந்த இருவரும், ஜெயச்சந்திரனை தாக்கினர். காயமடைந்த ஜெயச்சந்திரன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், நவீன், அஜித் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us