/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஷூ வாங்க 'கூகுள் பே' மூலம் லஞ்சம் ஏ.எஸ்.ஐ., மீது வழக்குப் பதிவு
/
ஷூ வாங்க 'கூகுள் பே' மூலம் லஞ்சம் ஏ.எஸ்.ஐ., மீது வழக்குப் பதிவு
ஷூ வாங்க 'கூகுள் பே' மூலம் லஞ்சம் ஏ.எஸ்.ஐ., மீது வழக்குப் பதிவு
ஷூ வாங்க 'கூகுள் பே' மூலம் லஞ்சம் ஏ.எஸ்.ஐ., மீது வழக்குப் பதிவு
ADDED : மார் 15, 2025 06:16 AM
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய ஏ.எஸ்.ஐ., மீது லட்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
புதுச்சேரி, கொம்பாக்கம் கமலம் நகரைச் சேர்ந்த பாபு. இவரது தாய் இந்திரா, கடந்த 2022ம் ஆண்டு கொம்பாக்கம் கூட்டுறவு வங்கியில் வைத்த 8 சவரன் நகை திருடுபோனதை, மீட்டு தர கடந்த டிச., மாதம் நடந்த மக்கள் மன்றத்தில் புகார் அளித்தார். விசாரணை அதிகாரியாக முதலியார்பேட்டை ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்க தனது வண்டிக்கு ரூ. 500க்கு பெட்ரோல் நிரப்பவும், தனக்கு 10 நம்பர் ஷூ வாங்க ரூ. 1800 பணம் கேட்டார். பெட்ரோலுக்கு ரூ. 500ம், ஷூ வாங்க ரூ. 1500 சுப்ரமணியன் கூகுள்பே அக்கவுண்டிற்கு பாபு அனுப்பினார். தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியன் மீது பாபு புகார் அளித்ததுடன், பணம் கேட்ட ஆடியோ, கூகுள்பே மூலம் பணம் அனுப்பிய ஆதாரங்களையும் ஒப்படைத்தார்.
இதையடுத்து, கூகுள்பே மூலம் லஞ்சம் வாங்கிய ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியனை கடந்த 11ம் தேதி டி.ஜி.பி., ஷாலினி சிங் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, தலைமை செயலர் உத்தரவின் பேரில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியன் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை துவங்கியுள்ளனர். இது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.