/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்குப் பதிவு
/
வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்குப் பதிவு
வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்குப் பதிவு
வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்குப் பதிவு
ADDED : மார் 11, 2025 06:07 AM
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் வியாபாரியைதாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் சோனியா காந்தி நகர் வெற்றிவேல், 35; பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரி. இவருக்கும், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் கம்பெனி நடத்தி வரும் ஏழுமலை என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளது.
வெற்றிவேல் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை வழியாக பைக்கில் சென்றபோது, சாணாரப்பேட்டையை சேர்ந்த கூத்தன் மகன் சதீஷ்குமார், வெற்றிவேலை வழிமறித்து தகராறு செய்தார். ஏழுமலைக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கொடுக்க மாட்டியா என கேட்டுவெற்றிவேலை திட்டிகையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
காயமடைந்த வெற்றிவேல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். சப்இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.