/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருந்து கொள்முதல் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மாஜி எம்.பி., வலியுறுத்தல்
/
மருந்து கொள்முதல் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மாஜி எம்.பி., வலியுறுத்தல்
மருந்து கொள்முதல் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மாஜி எம்.பி., வலியுறுத்தல்
மருந்து கொள்முதல் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மாஜி எம்.பி., வலியுறுத்தல்
ADDED : மே 21, 2024 04:56 AM
புதுச்சேரி: சுகாதாரத் துறை மருந்து கொள்முதல் வழக்கினை சி.பி.ஐ.,விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுகாதாரத் துறையில் கடந்த ஓராண்டுக்கு முன் தேசிய நலவழித் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட மருந்துகளில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதைப்பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் எந்தக் கருத்தும் சொல்லாமல் மவுனமாகவே உள்ளார். கருவுற்ற தாய்மார்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்ட மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி சுகாதாரத்துறை அமைச்சருக்கு அக்கறை இல்லை.
இதை வாங்குவதற்கு அரசு ஒரு நிரந்தர மருந்தாளுனரை நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஒருவரை நியமித்ததுள்ளது.
தரமற்ற மருந்துகளை வழங்கிய இரண்டு ஏஜென்சிகள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை. ரூ. 2.5 கோடி மதிப்பிலான காலாவதியான மருந்துகள் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.5 கோடி மதிப்பிலான மருந்துகள் என்னவானது. அதற்கான பணத்தை மருந்தை அளித்த கம்பெனிகளிடமிருந்து அரசு வசூலிக்கவில்லை.
மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் அரசுக்கு ஏற்பட்ட ரூ. 44 லட்சம் இழப்பிற்கும் யார் பொறுப்பேற்பது.
நான்கு மாதங்களுக்கு முன்தான் இந்த கொடுமையான சம்பவத்தை, துறை வாரியான விசாரணை, லஞ்ச ஒழிப்பு விசாரணை, தணிக்கைத்துறை விசாரணை என்று காலம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய உண்மை காரணங்களும் குற்றவாளிகளும் இதுவரை கண்டுபிடிக்க வில்லை. வி.ஐ.பி., குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு இந்த காலதாமத யுக்தி பின்பற்றப்படுகின்றது.
இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

