/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிமென்ட் சாலை பணிகள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு
/
சிமென்ட் சாலை பணிகள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு
சிமென்ட் சாலை பணிகள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு
சிமென்ட் சாலை பணிகள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூலை 03, 2024 09:24 AM

புதுச்சேரி : சோலை நகர் வடக்கு சுனாமி குடியிருப்பு பகுதியில், சிமென்ட் சாலை பணிகள் குறித்து பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமாரை, அவரது அலுவலகத்தில், சோலை நகர் வடக்கு மீனவ பஞ்சாயத்தார் நேற்று சந்தித்தனர். அவரிடம், சோலை நகர் வடக்கு சுனாமி குடியிருப்பில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், புதியதாக அமைக்கப்பட்டு வரும், சிமென்ட் சாலை பணி முழுவதும், முடிவு பெறாமல் உள்ளதாகவும், மழைக்காலங்களில் குளம் போல், மழைநீர் தேங்கி நிற்பதாக புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., அந்த பகுதியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோரை அழைத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதி மக்கள், சாலையில் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வசதி மற்றும் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தை தவிர்த்து, சாலை அமைக்க வலியுறுத்தினர்.
இதையடுத்து மீனவ பஞ்சாயத்தார், அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசனை செய்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவெடுத்து தெரிவிப்பதாக, பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ.,விடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் அனைவரும் முடிவு செய்து செய்து தெரிவித்த பின்னர், சாலை பணிகள் துவங்கும் என, அவர் உறுதி அளித்தார்.