/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் சேர்ந்துள்ள 51 மாணவர்களின் பெயர்களை தரவரிசை பட்டியலில் இருந்து நீக்க சென்டாக் முடிவு

ADDED : ஆக 27, 2024 04:11 AM
புதுச்சேரி : ஜிப்மரில் சேர்ந்துள்ள 51 மாணவர்களின் பெயர்களை சென்டாக் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு சென்டாக் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்க உள்ளது.
சென்டாக்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், ஜிப்மர் கல்லுாரிக்கு அகில இந்திய ஒதுக்கீடு வழியாக புதுச்சேரி ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர்.
இம்மாணவர்களை நீக்கிவிட்டு, சென்டாக் முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மரில் முதல் ரவுண்டில் சீட் ஒதுக்கி கல்லுாரியில் சேர்ந்த 51 மாணவர்களின் பெயர் பட்டியலை சென்டாக் நிர்வாகம் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆட்சேபனை இருப்பின், இன்று 27ம் தேதி மாலை 4 மணிக்குள் தங்கள் லாகின் மூலம் தெரிவிக்கலாம்.
ஒரு லட்சம்
ஜிப்மரில் சீட் கிடைத்த மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அப்படி பங்கேற்க விரும்பினால், இன்று 27 ம் தேதி மாலை 4 மணிக்குள் தங்களுடைய டேஷ்போர்டு வாயிலாக விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். சென்டாக் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கிய பின் சேரவில்லை எனில் இந்த முன் வைப்பு தொகை திருப்பி தர மாட்டாது.