/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வைத்திலிங்கம் எம்.பி., ஆருடம்
/
மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வைத்திலிங்கம் எம்.பி., ஆருடம்
மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வைத்திலிங்கம் எம்.பி., ஆருடம்
மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வைத்திலிங்கம் எம்.பி., ஆருடம்
ADDED : ஆக 21, 2024 07:44 AM

புதுச்சேரி : மத்தியிலும் மாநிலத்திலும் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என, வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்துள்ளார்.
வைசியாள் வீதியில் உள்ள மாநில காங்., தலைமை அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலுவலகம் முன், அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவிற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர் ஷாஜஹான், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வைத்திலிங்கம் எம்.பி., பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகள் அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ளாமல், பரவலாக்க வேண்டும் என்பது தான் முன்னாள் பிரதமர் ராஜிவின் எண்ணம்.
பிரதமர் மோடியும், முதல்வர் ரங்கசாமியும், அதிகாரத்தை பரவலாக்காமல் இருக்கின்றனர்.
அதானி தொடர்பாக, பார்லி., விசாரணைக்குழு அமைக்கக்கோரி நாடு முழுதும் காங்., சார்பில் வரும், 22ம் தேதி போராட்டம் நடத்தப்படுகிறது.
புதுச்சேரியில் அன்று சுதேசி மில் எதிரே, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை போராட்டம் நடத்தப்படும்.
முக்காலியில் ஒரு கால் உடைந்து போனாலும் பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார். ரங்கசாமி அரசும் டிசம்பர் மாதம் தாண்டுமா என பேசிக்கொள்கின்றனர். மோடி ஆட்சியும், ரங்கசாமி ஆட்சியும், நிலையற்றதாக உள்ளது.
மத்திய, மாநிலத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்' என்றார்.

