ADDED : மே 02, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் மத்திய கூட்டமைப்பு தலைவர் மதுரகவி தலைமை தாங்கினார். விழாவினை கூட்டமைப்பு தலைவர் அன்பு செல்வம் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். செயலாளர்கள் முகமது சித்திக், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமண சாமி சிறப்புரையாற்றினார்.
மத்திய கூட்டமைப்பின் இணைப்பு சங்கங்களின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் நுாற்றுாக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுத்துறை மற்றும் அரசு துறைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை உயர்த்தி தர வேண்டும் என, தீரமானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டமைப்பு பொருளாளர் சீனுவாசன் நன்றி கூறினார்.

