தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்வித்திறன் ஊக்கப்பரிசு பெற சான்றிதழ்கள் வரவேற்பு

கல்வித்திறன் ஊக்கப்பரிசு பெற சான்றிதழ்கள் வரவேற்பு

கல்வித்திறன் ஊக்கப்பரிசு பெற சான்றிதழ்கள் வரவேற்பு


ADDED : ஜூன் 03, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கல்வித்திறன் ஊக்கப்பரிசு பெற சான்றிதழ்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கை:

ஸ்ரீமதி விஜயலட்சுமி அம்மாள் அறக்கட்டளை சார்பில், 16-ம் ஆண்டு கல்வித்திறன் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில், 2025–26ம் கல்வியாண்டில் நடந்த 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி மூலம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

விழாவில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகல், மாணவரின் புகைப்படம், மாநில மற்றும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ், கல்லுாரி சான்றிதழ், தந்தை, தாயின் வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் ரேஷன் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அவற்றை, லாஸ்பேட்டை, ஏர்போர்ட் சாலை, பாரி நகர், 2வது தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us