தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கர்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி போடும் முகாம்

கர்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி போடும் முகாம்

கர்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி போடும் முகாம்


ADDED : ஜூலை 09, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 14 வயதுள்ள பெண் பிள்ளைகளுக்கான, கர்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி முகாம் வரும் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செவ்வேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; 

கர்ப்பப்பை வாய் புற்று நோயில் இருந்து  பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு, புதுச்சேரி சுகாதாரதுறை மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வரும்  12 மற்றும்  19 ஆகிய தேதிகளில்  காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், 14 வயதுக்கு மேற்பட்ட  (15 வயது பிறந்த நாளுக்கு முன்பு) உள்ள பெண் குழந்தைகள் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

அனைத்து பெற்றோர்களும் தங்கள் தகுதியான பெண் குழந்தைகளை தடுப்பூசிக்கு அழைத்து வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தகவல்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்களை அணுகவும் அல்லது U-WIN CITIZEN APP பயன்படுத்தவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us