/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி சிறுமி பாலியல் வழக்கு விசாரணை அதிகாரிகள் மாற்றம்
/
பள்ளி சிறுமி பாலியல் வழக்கு விசாரணை அதிகாரிகள் மாற்றம்
பள்ளி சிறுமி பாலியல் வழக்கு விசாரணை அதிகாரிகள் மாற்றம்
பள்ளி சிறுமி பாலியல் வழக்கு விசாரணை அதிகாரிகள் மாற்றம்
ADDED : மார் 01, 2025 04:20 AM
அரியாங்குப்பம் பள்ளி மாணவி பாலியல் விவகார வழக்கில் இருந்து அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவளக்குப்பம் செயின்ட் ஜோசப் ஆங்கில பள்ளியில், 1 வகுப்பு படித்த 6 வயது சிறுமிக்கு, அங்கு பணிபுரிந்த ஆசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த விவகாரத்தில், பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர்.
இது தொடர்பாக, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை, 25, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின், பெற்றோர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சிறுமியின் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.
சரியாக விசாரணை செய்ய தவறிய தவளக்குப்பம் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். சிறுமி பாலியல் வழக்கை, அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் இருந்து அவர்கள் மாற்றப்பட்டு, முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் சத்யா ஆகியோர் புதிய விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவை டி.ஜி.பி., ஷாலினி சிங், பிறப்பித்துள்ளார்.