/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை கோவிலில் இன்று தேர் திருவிழா
/
முத்தியால்பேட்டை கோவிலில் இன்று தேர் திருவிழா
ADDED : மார் 23, 2024 06:17 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை முத்துமாரியம்மன் முத்தையா கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, இன்று தேர் திருவிழா நடக்கிறது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன் முத்தையா கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, யாகசாலை பூஜை நடந்தது. இரவு மின்விளக்கு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை காலை காவடி உற்சவம், இரவு 7:00 மணிக்கு முத்துபல்லக்கு உற்சவம், 25ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.

