/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காளம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்
/
அங்காளம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்
ADDED : மார் 11, 2025 05:57 AM
திருபுவனை: மதகடிப்பட்டு அங்காளனம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது.
புதுச்சேரி திருபுவனை அடுத்த மதகடிப்பட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற அங்காளம்மன் கோவில் 10 நாள் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று காலை 10;00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் விநாயகர் பூஜையும், பகல் 12.30 மணிக்கு மாரியம்மன் கூழ் வார்த்தல் மாலை 3:30 மணிக்கு அய்யனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் நடைபெற்றது.
அன்று இரவு 7;00 மணிக்கு கொடிடயேற்றம் நடந்தது. விழாவையொட்டி தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையும் இரவு சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் 9ம் தேதி இரவு 10;00 மணிக்கு குடல் பிடுங்கி மாலை அணிதல் அம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று 10ம் தேதி பகல் 12.30 மணிக்கு மதகடிப்பட்டு மயானத்தில் மயான கொள்ளை இரவு அக்னி கிரகம் அம்மன் வீதி உலாவும் நடந்தது. இன்று 11ம் தேதி பகல் 11:30 மணிக்கு அம்மன் திருத் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4;30 மணிக்கு செடல் திருவிழாநடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி, உபதாரர்கள் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.