/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினத்தில்் இன்று தேரோட்டம்
/
வீராம்பட்டினத்தில்் இன்று தேரோட்டம்
ADDED : ஆக 16, 2024 05:52 AM
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.
வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தேரோட்ட விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, தினமும் அம்மன் வீதியுலா காட்சி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 5வது வெள்ளிக்கிழமை இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.
தேரோட்டத்தை கவர்னர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து, வரும் 17ம் தேதி தெப்பல் உற்சவமும், 23ம் தேதி முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

