பஸ் நிலையத்தில் போன் திருட்டு சென்னை வாலிபர் கைது
பஸ் நிலையத்தில் போன் திருட்டு சென்னை வாலிபர் கைது
ADDED : மே 08, 2026 06:20 PM
புதுச்சேரி: கடலுார் மாவட்டம், சிதம்பரம், தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா, 26; திருவாரூரில் உள்ள தனியார் மாலில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
ஜீவா கடந்த 7ம் தேதி காலை புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் சரவணனை பார்க்க வந்துவிட்டு, பின், இரவு 7:30 மணிக்கு சிதம்பரம் செல்ல புதுச்சேரி பஸ் நிலையம் வந்தார்.
அங்கு, கடலுார் பஸ் பிளாட்பாரத்தில் சிதம்பரம் செல்லும் பஸ்சிற்காக காத்திருந்து சற்று படுத்துள்ளார். அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போனை திருடிக்கொண்டு ஓடினார். இதைகண்டு, ஜீவா கூச்சலிட்டதால், அருகில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து, பஸ் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் மொபைல் போனை திருடி சென்ற நபரிடம் விசாரணை நடத்தியதில், சென்னை, தேனாம்பேட்டை, தாமஸ் ரோட்டை சேர்ந்த தீபக் (எ) யுவதீபன், 22; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து பொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
