/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதையில் ரகளை செய்த சென்னை வாலிபர்கள் கைது
/
போதையில் ரகளை செய்த சென்னை வாலிபர்கள் கைது
ADDED : ஆக 12, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ரங்கப்பிள்ளை வீதியில் 4 வாலிபர்கள் அதிகமாக மதுகுடித்து விட்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளை செய்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று போதையில் நிதானமில்லாமல் இருந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னையை சேர்ந்த தினேஷ், 24; யுவராஜ், 24; ஹரிகரன், 24; மோகன், 23; என தெரியவந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.