/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவாலியே செல்லான் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
செவாலியே செல்லான் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செவாலியே செல்லான் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செவாலியே செல்லான் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : செப் 11, 2024 02:04 AM

புதுச்சேரி : காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 1988-89 கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் குழு சார்பில் 2024ம் ஆண்டு ஆசிரியர் தின விழா மற்றும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
மாணவர் குழுவின் ஒருங்கிணைப்பாளரான, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்து வேல் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சேகர் வரவேற்றார். 35 ஆண்டிற்கு பிறகு நடந்து இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ரங்கநாதன், ஜெயபால், தேசிங்கு, முனுசாமி, பெருமாள், ராஜகோபால், லோகசுந்தரி கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மாணவர் குழுவைச் சேர்ந்த பாலாஜி, சுந்தரவடிவேல், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், மஞ்சினி, ஆறுமுகம், பரந்தாமன் செய்திருந்தனர்.
முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் மாணவர் குழு சார்பில் ஜெயா நன்றி கூறினார்.

