/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

ADDED : மார் 08, 2025 05:21 AM
புதுச்சேரி : 'பொதுமக்கள் காவல்துறையோடு ஒத்துழைப்பு அளித்து குற்றங்களை குறைப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் நடந்த 'மிஷன் வீரமங்கை' திட்டம் துவக்க விழாவில் அவர், பேசியதாவது:
காவல்துறை பெண்களுக்கு தைரியம், துணிச்சல், எதையும் சமாளிக்கும் எண்ணம் இருக்க வேண்டும் என்ற நிலையில் மிஷன் வீரமங்கை திட்டத்தை துவக்கி இருப்பது பாராட்டுக்குறியது.
புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மிஷன் வீரமங்கை திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
பள்ளி பிள்ளைகளுக்கு குற்றவியல் சம்மந்தமான பல கருத்துக்களை பள்ளிகளுக்கு சென்று எடுத்துக்கூறுவது, பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இது வாய்ப்பாக அமைந்துள்ளது.
காவல்துறையின் செயல்பாடுகளால் புதுச்சேரியில் இப்போது குற்றங்கள் குறைந்து வருவதை நாம் காணலாம். காவல்துறைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பொதுமக்கள் காவல்துறையோடு ஒத்துழைப்பு அளித்து குற்றங்களை குறைப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும்' என்றார்.