/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய நடுவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
/
தேசிய நடுவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
ADDED : ஜூலை 29, 2024 04:59 AM

புதுச்சேரி, : தேசிய அளவிலான போட்டிக்கு நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மத்திய அரசு விளையாட்டு துறை மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க அங்கீகாரத்துடன் இயங்கும் டேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா இணைப்பில் இயங்கி வரும், புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், தேசிய நடுவர்கள் தேர்வில் பலர் பங்கேற்றனர்.
இதில் புதுச்சேரியைச் சேர்ந்த சர்வதேச நடுவராக பகவத்சிங் தேர்வு செய்யப்பட்டார். நந்தகுமார், தக் ஷின பிரியா, செல்வரசி, ஆனந்தராஜ், தேவகணேஷ், ஹரிஹரன், ரகுராமன், ஜெகதீஷ், மஞ்சுளா தேவி, சரண்யஸ்வந்த் ஆகியோர் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இந்தியா முழுதும் அடுத்தடுத்து நடைபெற உள்ள தேசிய போட்டிகளில் நடுவர்களாக செயல்பட தகுதி பெற்றுள்ளனர்.
நடுவர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் அதற்கான சான்றிதழை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். சங்கத் தலைவர் ஸ்டாலின், செயலாளர் மஞ்சுநாதன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.