/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள் விளையாட்டரங்க பணி முதல்வர் துவக்கி வைப்பு
/
உள் விளையாட்டரங்க பணி முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : மார் 04, 2025 04:38 AM

புதுச்சேரி: கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ரூ.5 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 கோடியில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ரமேஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பூமி பூஜை செய்து, கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், விளையாட்டு துறை துணை இயக்குநர் வைத்தியநாதன், செயற்பொறியாளர் மலைவாசன், உதவி பொறியாளர் எல்லம்மாள், இளநிலை பொறியாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த உள்விளையாட்டரங்கில் கைப்பந்து, டேபிள் டென்னிஸ், கூடை பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள் மாணவர்கள் விளையாடும் வசதியும், பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வகையில் இருபுரமும் கேலரியும் அமைக்கப்பட்டுகிறது.