/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் மாளிகை தேனீர் விருந்தில் முதல்வர், எதிர்கட்சியினர் பங்கேற்பு

ADDED : ஆக 16, 2024 05:59 AM

புதுச்சேரி: கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் முதல்வர் ரங்கசாமி உட்பட எதிர்கட்சியினர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தில், நேற்று காலை கவர்னர் மாளிகையில், கவர்னர் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, நேற்று மாலை 5:15 மணிக்கு கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், காலாப்பட்டு கேந்திரியா வித்யாலயா பள்ளி மாணவி நிவேதித்தா பரத நாட்டியம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், அரசு கொறாடா ஆறுமுகம், எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எதிர்க் கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள், சிவசங்கர், பாஸ்கர், அனிபால் கென்னடி, ஜான்குமார், ரமேஷ், கல்யாணசுந்தரம், சம்பத், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு செயலர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், டி.ஜி.பி., ஷாலினி சிங், போலீஸ் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.