/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராமப்புற கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் முதல்வர் ரங்கசாமி 'அட்வைஸ்'
/
கிராமப்புற கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் முதல்வர் ரங்கசாமி 'அட்வைஸ்'
கிராமப்புற கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் முதல்வர் ரங்கசாமி 'அட்வைஸ்'
கிராமப்புற கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் முதல்வர் ரங்கசாமி 'அட்வைஸ்'
ADDED : ஆக 28, 2024 05:49 AM

புதுச்சேரி : கிராமப்புற கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க, ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என, கால்நடை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், 25வது பட்டமளிப்பு விழா, நேற்று கம்பன் கலையரங்கில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, 72 மாணவ-மாணவியருக்கு, பட்டங்களையும், தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்திய அரசு, கால்நடைப் பராமரிப்புத் துறை ஆணையர் அபிஜித் மித்ரா சிறப்புரையாற்றினார். கல்லுாரி டீன் செழியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சாய் சரவணன் குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர் ராஜூ, மருத்துவ பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.
ஐந்தரை ஆண்டு கால்நடை படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டாக்டர் விக்ரம் சந்து ஆறு பதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற்றார். டாக்டர் அபர்ணா ஐந்து பதக்கங்கள் பெற்றார்.
இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆசியாவில் சிறந்த கல்லுாரியாக உள்ளது. இந்த கல்லுாரியில் இதுவரை, 1,147 மாணவர்கள் படித்து விட்டு, வெளியே வந்துள்ளனர். இந்த மாணவர்கள் வேலை இல்லை என்று சொல்லும் நிலை இல்லை.
இக்கல்லுாரி வெளிநாட்டு கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, 18 மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கும், 4 மாணவர்கள் அமெரிக்காவிற்கும் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். விவசாயத்தோடு இணைந்தது கால்நடைத்துறை. விவசாயிகளுக்கு அதிக லாபத்தை கால்நடைகள் ஈட்டி கொடுக்கின்றன.
அந்த கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். அதனால் நீங்கள் கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும். கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க, நீங்கள் ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகள் மூலம் கிடைக்கும் புதிய மருந்துகள் கால்நடைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.