/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரம்
/
நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரம்
ADDED : மார் 28, 2024 04:27 AM

புதுச்சேரி : பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி மாநில எல்லையான கனகச்செட்டிகுளத்தில் இருந்து பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை 7:00 மணியளவில் மாநில எல்லையான கனகச்செட்டிகுளத்தில் இருந்து பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
கனச்செட்டி குளம், காலாப்பட்டு பகுதியில் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு ஆதரித்து பிரசாரம் செய்தார். வேட்பாளரை ஆதரித்து, பா.ஜ., வுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், அரசு கொறடா ஆறுமுகம், பா.ம.க., மாநில தலைவர் கணபதி, பா.ஜ., என்.ஆர்., காங்., பா.ம.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரச்சாரத்தை, நேற்று மாலை மாநில எல்லை பகுதியும், சனி மூலையுமான கனச்செட்டிகுளத்தில் இருந்து, தடை ஏற்படாமல் இருக்க பிள்ளையார் கோவிலில் இருந்து பிரசாரம் துவக்கப்பட்டது.
பிரசாரம் துவங்குவதற்கு முன்பாக, பூசணிக்காய் உடைத்து, சூடம் ஏற்றி கட்சி தொண்டர்கள் திஷ்டி கழித்தனர்.
இ.சி.ஆர்., சாலை, காலாப்பட்டு பகுதியில், கிரேன் மூலம் பெரிய மாலையை,முதல்வர் மற்றும் வேட்பாளருக்கு அணிவித்தனர்.