/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் மோடிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
பிரதமர் மோடிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : ஜூன் 10, 2024 07:01 AM
புதுச்சேரி : நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றிருக்கும் மோடிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றிருக்கும் தருணத்தில், நாட்டு மக்கள் அனைவரின் மகிழ்ச்சியால், மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் அவர் பெற்றிருப்பதை அறியமுடிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் சுகாதாரம், விவசாயம், பொருளாதாரம், மகளிர் முன்னேற்றம், இளைஞர் நலன், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் பெற்று உலகின் மிகப்பெரிய வளர்ந்த நாடாக இந்தியா முன்னேறும் என்பதில் ஐயமில்லை.
உலகின் வலிமைமிக்க தலைவராக மீண்டும் பரிணமித்துள்ள பிரதமர் மோடிக்கு, எனது மற்றும் புதுச்சேரி அரசு சார்பாக நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுகிறது.