/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பு முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு

ADDED : ஆக 25, 2024 11:43 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த 'டிரோன்' மூலம் கொசு மருந்து தெளிக்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் கொசுத்தொல்லை மற்றும் அதனால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா முதலான நோய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொசு உற்பத்தி அதிகரிக்கும் இடங்களான, தேங்கி உள்ள நீர்நிலைகள், புதர்கள் மண்டிக்கிடக்கும் இடங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு அந்த இடங்களில், 'டிரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சித்துறை திட்டமிட்டது.
முதல்வர் ரங்கசாமி தலைமையில், சட்டசபை வளாகத்தில், இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், துணை இயக்குனர் சவுந்தரராஜன், நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், நலவழித்துறையின் மலேரியா ஒழிப்பு உதவி இயக்குனர் வசந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.