/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவில் சர்வீஸ் தேர்வில் அதிகளவில் பெண்கள் வெற்றி பெற வேண்டும் முதல்வர் ரங்கசாமி பேச்சு
/
சிவில் சர்வீஸ் தேர்வில் அதிகளவில் பெண்கள் வெற்றி பெற வேண்டும் முதல்வர் ரங்கசாமி பேச்சு
சிவில் சர்வீஸ் தேர்வில் அதிகளவில் பெண்கள் வெற்றி பெற வேண்டும் முதல்வர் ரங்கசாமி பேச்சு
சிவில் சர்வீஸ் தேர்வில் அதிகளவில் பெண்கள் வெற்றி பெற வேண்டும் முதல்வர் ரங்கசாமி பேச்சு
ADDED : மே 05, 2024 05:41 AM

புதுச்சேரி, : 'ஐ.ஏ.எஸ்., தேர்வில் பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு இதயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 20ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லுாரி முதல்வர் பாத்திமா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பேசியதாவது:
புதுச்சேரியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் முத்திரை தீர்வில் சலுகை அளித்துள்ளோம். அரசின் எந்த திட்டத்திலும் பயனடையாத மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்து வருகிறோம்.
பெண் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கிறோம். காஸ் சிலிண்டர் மானிய திட்டமும் செயல்படுத்தி வருகிறோம். ஐ.ஏ.எஸ்., தேர்வில் புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வெற்றிபெற வேண்டும். பெண் கல்வி வளர்ச்சிக்கு இக்கல்லுாரி சிறந்த பங்களிப்பினை அளித்து வருகிறது.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு, கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி இணை பேராசிரியர் சவரிமுத்து, அரியாங்குப்பம் இமாகுலேட் பள்ளி முதல்வர் சமுலேலா அடைக்கலமேரி, சென்னை பெட்ரிஷியன் கல்லுாரி முதல்வர் ஆரோக்கியமேரி கீதா ரூபஸ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
சிறந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை மைய கருத்தாக கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.