/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாரிசுதாரர்களுக்கு பல்நோக்கு ஊழியர் பணி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
வாரிசுதாரர்களுக்கு பல்நோக்கு ஊழியர் பணி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வாரிசுதாரர்களுக்கு பல்நோக்கு ஊழியர் பணி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வாரிசுதாரர்களுக்கு பல்நோக்கு ஊழியர் பணி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : ஆக 13, 2024 04:53 AM
புதுச்சேரி: இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு எம்.டி.எஸ்., வேலை வழங் கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
பட்ஜெட் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அங்காளன் எம்.எல்.ஏ.,: அனைத்து பள்ளிகளிலும், ஹவுஸ்கீப்பிங், வாட்ச்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன.
முதல்வர் ரங்கசாமி: எம்.டி.எஸ்., பதவிகளை நேரடி நியமனம் முறையில் நிரப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக சீர்த்திருத்த துறையின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து தினக்கூலி ஊழியர்களும் எம்.டி.எஸ்., ஆக பணி நியமனம் செய்யப்பட்டு விட்டனர். எனவே எம்.டி.எஸ்., பணியிடங்களை நிரப்ப முடியவில்லை.
ஒப்பந்த பணியாளர்கள் மூலம் மூலம் இப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அங்காளன்(சுயேச்சை):- இந்த பணியை வழங்க டெண்டர் கொடுத்து விட்டீர்களா. காலக்கெடு ஏதேனும் நிர்ணயிக்கப்பட் டுள்ளதா.
முதல்வர் ரங்கசாமி: அரசு துறைகளில் 400 எம்.டி.எஸ்., ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இறந்த அரசு ஊழியர் களின் வாரிசுதாரர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பணி வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு பல்நோக்கு ஊழியர்களாக பணியில் அமர்த்த வேண்டும் என்று தலைமை செயலரிடம் சொல்லியுள்ளேன். அவர்களை காவலாளிகளாக நியமிக்கலாம்.
அங்காளன் (சுயேச்சை): எந்தபள்ளியிலும் வாட்ச்மேன் இல்லை. துப்புரவு பணிகள் நடக்கவில்லை.
முதல்வர் ரங்கசாமி: பள்ளி தூய்மை அவசியம். கழிப்பிடம் தூய்மை இருக்க வேண்டும். துப்புரவு பணியும் நடக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பாதுகாப்பு முக்கியம். ஏற்கனவே பள்ளிகளில் ரொட்டி பால் ஊழியர்கள் உள்ளனர்.
அவர்களை பணிகளில் ஈடுபடுத்தாலம். பல்நோக்கு பணிகளை அவர்களும் செய்யவேண்டும். முதலில் எந்தந்த பள்ளிகளில் எம்.டி.எஸ்., ஊழியர்கள் தேவை என்பதை பார்க்க வேண்டும்.
நாஜிம் (தி.மு.க.,): பள்ளி களில் எங்கு பல்நோக்கு ஊழியர்கள் தேவை என அடையாளம் காணப்பட்டு, பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பப்பட் டுள்ளது.
முதல்வர் ரங்கசாமி: அவுட்சோர்சிங் முறையில் விரைவில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளோம்.