/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சீத்தாராம் யெச்சூரி மறைவு முதல்வர் ரங்கசாமி இரங்கல்
/
சீத்தாராம் யெச்சூரி மறைவு முதல்வர் ரங்கசாமி இரங்கல்
சீத்தாராம் யெச்சூரி மறைவு முதல்வர் ரங்கசாமி இரங்கல்
சீத்தாராம் யெச்சூரி மறைவு முதல்வர் ரங்கசாமி இரங்கல்
ADDED : செப் 13, 2024 06:52 AM
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு, இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி:
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான மா.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்த சீத்தாராம் யெச்சூரி, தனது வாழ்நாள் முழுதும் பொதுவுடைமை சித்தாந்தங்களை கடைப்பிடித்து, அதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்.
ஏழை எளிய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பார்லி., உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வந்த அவரது மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.