/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு முதல்வர் ரங்கசாமி தகவல்
/
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு முதல்வர் ரங்கசாமி தகவல்
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு முதல்வர் ரங்கசாமி தகவல்
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : ஆக 09, 2024 04:43 AM
புதுச்சேரி: ரேஷன் கடைகள் மூலம் இலவச வெள்ளை அரிசி, மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை திட்டம் இந்தாண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாத்தில் 3 நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் பேசி முடித்த பின்பு, பதில் அளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;
மாநில வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மக்களுக்காக செய்யும் நலத்திட்டங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுக்கான நலத்திட்டங்களை எந்த நிலையிலும் குறைக்க முடியாது. அதே நேரத்தில் மூலதன செலவினங்களை அதிகரிக்க வேண்டும்.
புதுச்சேரி சிறந்த வளர்ச்சி பெற மாநில அந்தஸ்து அவசியம். அதை பெற வேண்டும் என்ற அனைவரின் எண்ணமும் வரவேற்கத்தக்கது. எம்.பி.க்களால் பார்லிமெண்டில் வலியுறுத்தி மாநில அந்தஸ்து பெற்று தந்தால் நல்லது.
பெரும் முயற்சி காரணமாக புதுச்சேரி வளர்ச்சி அடைந்து வருகிறது. சில குறைகள் இருக்கலாம். பல சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஆனால் முடியவில்லை. அமுதசுரபி, கான்பேட் போன்ற நிறுவனங்கள் துாக்கி நிறுத்தியுள்ளோம். பாசிக் போன்ற சில நிறுவனங்கள் சீர்துாக்கி நிறுத்த முடியவில்லை. அவை மிக மோசமான நிலைக்கு சென்று விட்டன.
மூடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதியம் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிற்சாலை வர சில சலுகைகளை தனியார் நிறுவனங்கள் எதிர்பார்க்கிறது. அதனை அரசு பரிசீலித்து வருகிறது. ஐ.டி., பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் நிறுவனங்கள் அமைக்க உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டால் பல தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு சென்று விட்டனு. இந்நிலையை மாற்ற வேண்டும். சென்டாக் நிலுவை தொகை விரைவில் வழங்கப்படும்.
அரசு பள்ளியில் படித்து கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இந்தாண்டே செயல்பாட்டிற்கு வரும். நகர பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 450 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். அத்திட்டம் விரைவாக செயல்படுத்துவோம்.
தனியார் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விளையாட்டு துறைக்கு என, தனியாக நிதி ஒதுக்கியதுடன், தனி இயக்குநர் நியமிக்கப்பட உள்ளார். வில்லியனுார் ஆன்மிக சுற்றுலா தளமாக மாற்றப்படும். மாநில அந்தஸ்து பெறுவதில் முழு கவனம் செலுத்துவோம்.
கான்பெட் மூலம் வெள்ளை அரிசி கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். அதுபோல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையும் வழங்கப்படும். மாநில அந்தஸ்து குறித்து இக்கூட்டத் தொடர் முடிவில்அரசு தீர்மானம் போடப்படும். பட்ஜெட் நிதி முழுமையாக செலவு செய்யப்படும்' என்றார்.