/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'காலத்தோடு வழங்கப்படும் நலத்திட்ட உதவி' முதல்வர் ரங்கசாமி பெருமிதம்
/
'காலத்தோடு வழங்கப்படும் நலத்திட்ட உதவி' முதல்வர் ரங்கசாமி பெருமிதம்
'காலத்தோடு வழங்கப்படும் நலத்திட்ட உதவி' முதல்வர் ரங்கசாமி பெருமிதம்
'காலத்தோடு வழங்கப்படும் நலத்திட்ட உதவி' முதல்வர் ரங்கசாமி பெருமிதம்
ADDED : ஆக 01, 2024 06:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூக நலத்துறை பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா, தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர், சேக்கிழார் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
தலைமை செயலர் சரத் சவுகான், நலத்துறை செயலர் முத்தம்மா வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், 'மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்கள் அனைத்தும், சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நமது அரசு பொறுப்பேற்ற உடன், நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்கியதுடன் மட்டுமின்றி காலத்தோடும் வழங்கி வருகிறது. இது மக்களுக்கான அரசு. ஏழை, எளிய மக்களுக்கான அனைத்து திட்டங்களையும், நமது, அரசு சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது' என்றார்.
விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு சைக்கிள், ரெயின் கோட், 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு போர்வைகள், காலணிகள் வழங்கப்பட்டன.
இந்த நலத்திட்ட உதவிகளின் மொத்த நிதி மதிப்பீடு ரூ.8.50 கோடி. சமூக நலத்துறை இயக்குனர் ராகினி நன்றி கூறினார்.