/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்த நாள் விழா பாகூர் கோவிலில் சிறப்பு பூஜை
/
முதல்வர் பிறந்த நாள் விழா பாகூர் கோவிலில் சிறப்பு பூஜை
முதல்வர் பிறந்த நாள் விழா பாகூர் கோவிலில் சிறப்பு பூஜை
முதல்வர் பிறந்த நாள் விழா பாகூர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஆக 03, 2024 11:47 PM

புதுச்சேரி: முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு என்.ஆர். காங்., சார்பில், பாகூரில் உள்ள மூலநாதர் கோவிலில் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
பாகூரில் உள்ள வேதாம்பிகை உடனுறை மூலநாதர் கோவிலில், என்.ஆர்.காங்., பிரமுகர் அமுதன் என்கிற அமிர்தலிங்கம் தலைமையில், ஜோதிபிரகாசம், திருவேங்கடம், சீனிவாசன், காத்தவராயன், முன்னாள் வார்டு உறுப்பினர் கணேசன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில், மூலநாதர் மற்றும் வேதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அப்பகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோவில் பிரசாதத்தை, முதல்வர் ரங்கசாமியிடம், என்.ஆர்.காங்., பிரமுகர் அமிர்தலிங்கம் வழங்கினார்.