/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., மேலிட பொறுப்பாளரிடம் முதல்வர் டென்ஷன் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு
/
பா.ஜ., மேலிட பொறுப்பாளரிடம் முதல்வர் டென்ஷன் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு
பா.ஜ., மேலிட பொறுப்பாளரிடம் முதல்வர் டென்ஷன் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு
பா.ஜ., மேலிட பொறுப்பாளரிடம் முதல்வர் டென்ஷன் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு
ADDED : ஜூலை 29, 2024 04:43 AM
புதுச்சேரி, : அதிருப்தி எம்.எல்.ஏ.,க் கள் சமாதானமாகாத சூழ்நிலையில், முதல்வர் ரங்கசாமியை பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு பிறகு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் அதிருப்தியில் உள்ளனர்.
தேர்தல் தோல்விக்கு முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்கள் அணுகுமுறை காரணம் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் மெக்வால், கிஷன் ரெட்டி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். அவர்களை பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சமாதானப்படுத்தியும், சமதானமாகவில்லை.
இதற்கிடையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இறுதி முயற்சியில் இறங்கினார்.
நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த அவரை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து பேசவில்லை. ஆளுக்கொரு காரணம் கூறி, தட்டிக்கழித்தனர்.
இதனிடையே பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆரோவில்லில் முதல்வர் ரங்க சாமி வழக்கமாக காபி சாப்பிடும் மார்க் கபே ரெஸ்ட்ரண்ட்டில் நேற்று காலை 10:00 மணியளவில் சந்தித்து பேசினார்.
அப்போது, இருவரும் புதுச்சேரி அரசியல் நிலவரம், பா.ஜ., எம்.எல்.ஏக்கள் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விவகாரம் குறித்து நீண்ட நேரம் பேசினர்.
தோல்வி ஏன்...
எப்போதுமே தமிழக தேர்தல் முடிவினையொட்டி தான் புதுச்சேரி தேர்தல் முடிவுகளும் இருக்கும். அது தான் புதுச்சேரியிலும் எதிரொலித்தது.
தலித், சிறுபான்மையினர் பா.ஜ.,வினை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தான் 1.40 லட்சம் ஓட்டு கள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் என்.ஆர்.காங்., -பா.ஜ., இணைந்தே எடுத்தோம்.
தேர்தல் முடிவு நமக்கு சாதகமாக இல்லை. இதில் வேறு ஒன்றும் சொல்ல முடியாது எனக் கூறி முதல்வர் ரங்கசாமி ஆதங்கப்பட்டார்.
அடுத்ததாக பா.ஜ., எம்.எல்.ஏக்கள் அதிருப்தி விவகாரம் தொடர்பாக பேச்சு எழுந்தபோது, கடும் டென்ஷனான முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., வினால் இழப்பே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விவகாரம் உங்களுடைய உட்கட்சி சம்பந்தப்பட்டது. அதை பேச வேண்டாம். நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என, காட்டமாகவே தெரிவித்தார்.
அடுத்து, வாரிய தலைவர் நியமனம் தொடர்பாக பேச்சு எழுந்தபோதும் மீண்டும் டென்ஷன் ஆன, முதல்வர், இப்போதைக்கு அதைபற்றி பேச வேண்டாம் என, முற்றுப்புள்ளி வைத்தார். 30 நிமிட சந்திப்பிற்கு பிறகு 10:30 மணியளவில் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அங்கிருந்து புறப்பட்டார்.
இதற்கிடையில், வரும் 31ம் தேதி சட்டசபை கூட்ட தொடர் துவங்க உள்ள சூழ்நிலையில் ஆளும் அரசும் மீது பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,கள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளதால் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.