/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமை செயலகம் முற்றுகை: 5 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு
/
தலைமை செயலகம் முற்றுகை: 5 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு
தலைமை செயலகம் முற்றுகை: 5 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு
தலைமை செயலகம் முற்றுகை: 5 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு
ADDED : செப் 04, 2024 07:41 AM
புதுச்சேரி : தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட எதிர்க் கட்சி தலைவர் உட்பட 4 எம்.எல்.ஏ.,க்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில், தலைமை செயலகத்தை முற்றுகையிட நேற்று முன்தினம் சென்றனர். முற்றுகை போராட்டத்தில், தி.மு.க., காங்., உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் உடப்ட கட்சியினர் அண்ணா சாலையில் இருந்து, தலைமை செயலகம் நோக்கி சென்றனர்.
நேரு வீதி - கேண்டீன் வீதி வழியாக சென்ற கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ., களை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ., க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் உட்பட பலர் மீது 170 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.