/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசு கட்டடங்களை தலைமை செயலர் திடீர் ஆய்வு
/
புதுச்சேரி அரசு கட்டடங்களை தலைமை செயலர் திடீர் ஆய்வு
புதுச்சேரி அரசு கட்டடங்களை தலைமை செயலர் திடீர் ஆய்வு
புதுச்சேரி அரசு கட்டடங்களை தலைமை செயலர் திடீர் ஆய்வு
ADDED : மே 24, 2024 04:04 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கட்டடங்களை தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று பார்வையிட்டு திடீர் ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரியில் உள்ள அரசு கட்டடங்களின் நிலை மற்றும் அதன் பயன்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக தலைமை செயலர் சரத்சவுகான் அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆய்வு நடத்தினர்.
இதில் கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் உள்ள பழைய சுற்றுலாத்துறை இயக்குனர் அலுவலகம், பழைய சாராய ஆலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கலாசார பண்பாட்டு மையக் கட்டடம், கொம்பாஞி வீதியில் உள்ள ஆயுஷ் இயக்குனர் அலுவலகம், வைத்திகுப்பத்தில் இடிந்த நிலையில் பாழடைந்துள்ள பழைய சாராய ஆலை ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடம்.
கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபம் ஆகிய கட்டடங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டடங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் கேசவன், பொதுப் பணி துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த் ரே, கலைப் பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், சுந்தர்ராஜன் சுந்தரமூர்த்தி, சுற்றுலாத்துறை சீனியர் மேனேஜர் ஆஷாகுப்தா ஆகியோர் உடனிருந்தனர்.