/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழந்தை இல்லாத தம்பதிகள் அமுத படையல் விழாவில் வழிபாடு
/
குழந்தை இல்லாத தம்பதிகள் அமுத படையல் விழாவில் வழிபாடு
குழந்தை இல்லாத தம்பதிகள் அமுத படையல் விழாவில் வழிபாடு
குழந்தை இல்லாத தம்பதிகள் அமுத படையல் விழாவில் வழிபாடு
ADDED : மே 08, 2024 01:36 AM

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் கிராமத்தில் 81ம் ஆண்டு சிறுதொண்ட நாயனார் திருஅமுத படையல் விழாவில் குழந்தை இல்லாத தம்பதிகள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கல்மண்டபம் கிராமத்தில் 81ம் ஆண்டு சிறுதொண்ட நாயனார் திருஅமுத படையல் விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 8.30 மணிக்கு சிறுதொண்ட நாயனார் மனைவியிடம் ஆலோசனை கேட்டல், 11 மணிக்கு சீராளனை அழைத்தல், மதியம் 12.00 மணிக்கு திருஅமுது படைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து நுாற்றுாக்கும் மேற்ப்பட்ட குழந்தை இல்லாத தம்பதிகள் பங்கேற்று அமுதபடையல் வாங்கி சாப்பிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, இரவு 9.00 மணிக்கு திருவிளையாடல் புராணம் நடந்தது.
ஏற்பாடுகளை கல்மண்டபம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

