தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் 

குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் 

குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் 


ADDED : ஏப் 30, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 250 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அறிவியல் இயக்கம், சமம் பெண்கள் இயக்கம், உதவி கரங்கள் சார்பில்குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாப்பட்டது. துணைத் தலைவர் ஹேமாவதி தலைமை தாங்கினார்.செயலாளர் முருகவேல் வரவேற்றார்.

புதுச்சேரிஅரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் ஆற்றல் துறையின் செயலர் முத்தம்மா சிறப்புரையாற்றினார்.

பாரதிதாசன் மகளிர் கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் மதிவாணன்,சமம் பெண்கள் இயக்க தலைவர் அன்பரசி ஜெயக்குமார் வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து நடந்த 8 அறிவியல் செயல்பாட்டு அரங்குகளில், 30 கருத்தாளர்கள், 25 தன்னார்வலர்கள்,பல்வேறு கிராமங்களில் இருந்து 250 குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி தாமஸ் பிரகாசம் அறிவியல் ஆய்வுகள் குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ஏற்பாடுகளை உதவி கரங்கள் நிறுவனர் ஆலிஸ் தாமஸ், சமம் இயக்க செயலாளர் இளவரசி,துளிர் இல்லம் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

அறிவியல் இயக்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us