/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்துக்கேணி அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
சுத்துக்கேணி அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 13, 2024 05:13 AM

திருக்கனுார்: சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
திருக்கனுார் அடுத்த சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில், 2023-24ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் பெற்றுள்ளனர்.
பள்ளி அளவில் மாண வன் பிரகஸ்பதி - 426 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவிகள் தர்ஸியா-421, யூவஸ்ரீ-420 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் திருவரசன் மற்றும் ஆசிரியர்கள் பரமேஸ்வரி, விஜயா, குமாரவேல், சரவணராஜா, ரம்யாஸ்ரீ, ஜவகர் பத்மநாபன், ராஜேஸ்வரி, அந்தோனி, தாரணி, சவுமியா ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.