பள்ளி அருகே பெட்டி கடையில் ரூ. 1. லட்சம் சிகரெட் பறிமுதல்
பள்ளி அருகே பெட்டி கடையில் ரூ. 1. லட்சம் சிகரெட் பறிமுதல்
ADDED : ஜூலை 01, 2026 07:21 PM
புதுச்சேரி: உருளையன்பேட்டை தனியார் பள்ளி அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் பின்புறம், தனியார் பள்ளி அருகே 100 மீட்டர் இடைவெளிக்குள் உள்ள பெட்டிக் கடையில் சிகரெட் விற்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
‘சாந்தி ஸ்டோர்’ என்ற பெட்டிக்கடையில், பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகரெட் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. போலீசார் கடையில் சோதனை செய்தபோது, அங்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான 15 வகை சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிகரெட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் உருளையன்பேட்டை, சுப்பையா நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன், 48, என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
