/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சினிமா ஊழியருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : மார் 08, 2025 03:56 AM

புதுச்சேரி : சிறுமியை, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சினிமா படப்பிடிப்பு ஊழியருக்கு 20 ஆண்டு தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். 30; சினிமா வெளிப்புற படப்பிடிப்பு ஊழியர். இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி சென்னைக்கு அழைத்து சென்றார். தாம்பரத்தில் வீடு எடுத்து கடந்த 2022 அக்., 16ம் தேதி முதல் நவ., 4ம் தேதி வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் கார்த்திக்கை கைது செய்து, சிறுமியை மீட்டனர். மேலும், கார்த்திக் மீது புதுச்சேரி கோர்ட்டில் போக்சோ வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றவாளி கார்த்திக்கிற்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார்.