ADDED : மார் 13, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சி.ஐ.டி.யு., வீட்டு வேலை செய்வோர் சங்கத்தினர் கோரிக்கைளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர்.
ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு சங்க தலைவர் லாவண்யா தலைமை தாங்கினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தை ஜென்மராகினி மாதா கோவில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு நடத்திய ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு சாரா நலச்சங்கத்தில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.