/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு சிறையில் கைதிகள் மோதல்
/
காலாப்பட்டு சிறையில் கைதிகள் மோதல்
ADDED : மே 30, 2024 04:34 AM
புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 200க்கும் அதிகமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் காலை சிறை சமையல் அறையில், முதலியார்பேட்டை போலீஸ் நிலைய போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற உசேனுக்கும், பாகூர் வழக்கில் தண்டைன பெற்ற சிலம்பரசன் (எ) அஸ்வின் என்ற கைதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இதில், அஸ்வினுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அஸ்வின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிறைக்கு அழைத்து வரப்பட்டார். இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் காலாப்பட்டு, போலீசில் புகார் அளித்தார்.
சப்இன்ஸ்பெக்டர் குமார், சிறை கைதி உசேன் மீது தாக்குதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.