தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 10ம் வகுப்பு சான்றிதழ் பதிய ஏற்பாடு 

10ம் வகுப்பு சான்றிதழ் பதிய ஏற்பாடு 

10ம் வகுப்பு சான்றிதழ் பதிய ஏற்பாடு 


ADDED : செப் 04, 2024 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்வதில் ஏற்படும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டைபோல் இந்தாண்டு (2023-24) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் விவரங்கள் மட்டும், பள்ளி கல்வித்துறை இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு வேலை வாய்ப்பகத்தில், தேசிய தகவல் தொழில்நுட்ப மைய மொபைல் செயலி உதவியுடன் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவிற்காக அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம்.

10ம் வகுப்பு கல்வி தகுதியை மொபைல் செயலியில் பதிவு செய்யும் முறை தொழிலாளர் துறை இணையதளமான (https://labour.py.gov.in), (https://ee.py.gov.in) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி லிங்கை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை பதிந்து வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி உங்களது பிராந்தியம், மதிப்பெண் சான்றிதழ் 7 இலக்க பதிவு எண், பிறந்த தேதி மற்றும் இதர தகவல்களை பூர்த்தி செய்த பின் சமர்ப்பிக்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us