தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒதியம்பட்டு குளூனி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஒதியம்பட்டு குளூனி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஒதியம்பட்டு குளூனி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 15, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: ஒதியம்பட்டு புனித சூசையப்பர் குளூனி சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு தேர்வு 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு புனித சூசையப்பர் குளூனி சி.பி.எஸ்.சி., பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 86 மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தளனர்.

மாணவி ஜான்ஹவி யு அஸ்ரா 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவி சிவானிக்கா 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவி ஸ்வேதா 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

90 சதவீதத்திற்கு மேல் 32 மாணவிகள், 80 சதவீதத்திற்கு மேல் 23 பேர், 70 சதவீதத்திற்கு மேல் 27 பேர், 60 சதவீதத்திற்கு மேல் 4 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அவர்களை பள்ளி தாளாளர் எமிலியான மற்றும் பள்ளி முதல்வர் ஜெய்ஸ் ஜான் ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டினர்.

மாணவர்கள், பெற்றோர் கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us