/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவை கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் 'ஸ்ரீபிட் காயினில்' ரூ.50 கோடி சுருட்டல்
/
கோவை கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் 'ஸ்ரீபிட் காயினில்' ரூ.50 கோடி சுருட்டல்
கோவை கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் 'ஸ்ரீபிட் காயினில்' ரூ.50 கோடி சுருட்டல்
கோவை கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் 'ஸ்ரீபிட் காயினில்' ரூ.50 கோடி சுருட்டல்
ADDED : மார் 01, 2025 02:46 AM
புதுச்சேரி: கிரிப்டோ கரன்சி மோசடி செய்த கோவை கும்பல், 'ஸ்ரீபிட் காயின்' பெயரில் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர் அசோகன், 70, கடந்த 2023ம் ஆண்டு ஆஷ்பே இணையதளத்தில் கிரிப்டோ கரன்சியில், 98 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், கோவையை சேர்ந்த சையது உஸ்மான், இம்ரான் பாஷா ஆகியோர் டி.சி.எக்ஸ் என்ற காயின் உருவாக்கி, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, நாடு முழுதும் பல கோடி ரூபாய் ஏமாற்றியது தெரியவந்தது. புதுச்சேரியில் மட்டும், 9 பேரிடம், 3.4 கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளனர்.
இவ்வழக்கில், கோவை நித்தீஷ்குமார் ஜெயின், 36, அரவிந்த்குமார், 40, ஆகியோரை பிப்., 26ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
மோசடியில் மூளையாக செயல்பட்ட இம்ரான் பாஷா, சையது உஸ்மான், இயக்குநர்கள் போல் செயல்பட்ட கோவை தாமோதரன், நுார்முகமது உட்பட 11 பேர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் தலைமறைவாக உள்ள 11 பேர் மோசடி பணத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா, சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர்.
இதனால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறையும் இணைந்து விசாரிக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த கும்பல் ஆஷ்பே இணையதளத்தை மூடிய பின், ஸ்ரீபிட் காயின் என்ற புதிய தளத்தை உருவாக்கி, அதில், 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசுக்கு புகார்கள் வரத்துவங்கி உள்ளன.