/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர் வைத்தவர்களை கைது செய்ய கலெக்டர் அதிரடி உத்தரவு
/
அனுமதியின்றி பேனர் வைத்தவர்களை கைது செய்ய கலெக்டர் அதிரடி உத்தரவு
அனுமதியின்றி பேனர் வைத்தவர்களை கைது செய்ய கலெக்டர் அதிரடி உத்தரவு
அனுமதியின்றி பேனர் வைத்தவர்களை கைது செய்ய கலெக்டர் அதிரடி உத்தரவு
ADDED : செப் 04, 2024 07:09 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் கொடிகள் அகற்றுவது தொடர்பாக கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
போலீஸ் எஸ்.பி., கிழக்கு லட்சுமி சவுஜன்யா, சப் கலெக்டர்கள் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன், வினயராஜ், உள்ளாட்சித்துறை துணை இயக்குநர் சவுந்தரராஜன், எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், செல்வம், வம்சீதரெட்டி மற்றும் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்கள் வைப்பதிற்கான நெறிமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மழைக்காலம் துவங்க உள்ளதால், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு போலீஸ், உள்ளாட்சி, பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகள் அகற்றவும் அறிவுறுத்தினர்.
அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
பேனர்கள் அகற்றுவதற்கான செலவின தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க அறிவுறுத்தினர்.
மேலும், அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் கொடிகள் வைத்துள்ளவர்கள் தாமாக முன் வந்து அகற்ற வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார்.