/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிலம்பம் வீரர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
/
சிலம்பம் வீரர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
ADDED : மார் 06, 2025 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: தமிழகத்தில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த முத்தமிழன் சிலம்பம் ஆசான் முருகன் பயிற்சி பட்டறை மாணவர்கள் 21 பேர், கடந்த மாதம் திருவாரூரில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று 21 பரிசுகளை வென்று காரைக்கால் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றிக் கோப்பையுடன் காரைக்கால் திரும்பிய மாணவர்கள், கலெக்டர் சோம சேகர் அப்பாராவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவர்கள் கலெக்டர் அலுவலம் வளாகத்தில் சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை வெளி காட்டினார்.