/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாங்கனித் திருவிழா ஏற்பாடுகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
/
மாங்கனித் திருவிழா ஏற்பாடுகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
மாங்கனித் திருவிழா ஏற்பாடுகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
மாங்கனித் திருவிழா ஏற்பாடுகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : மே 30, 2024 04:51 AM

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனித் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் மணிகண்டன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா வரும் ஜூன் 19 முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கி பேசுகையில், 'விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். காவல்துறை அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் சிரமமின்றி கலந்து கொள்ள பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அமுது படையல் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அளிக்கும் உணவு தரமாக இருக்க வேண்டும். சுவாமி வீதியுலாவின்போது மரங்கள், மின்கம்பிகள் சரிசெய்ய வேண்டும். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கூடுதல் மருத்துவ வசதிகள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும். அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது. கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் துணை கலெக்டர் ஜான்சன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.