/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு சிறையில் கலெக்டர் ஆய்வு
/
காலாப்பட்டு சிறையில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 23, 2024 06:47 AM

புதுச்சேரி: காலப்பட்டு மத்திய சிறையில் கலெக்டர் குலோத் துங்கன் ஆய்வு செய்தார்.
பெருகி வரும் குற்றங்கள் காரணமாக சிறையில் உள்ள கைதிகளை அடைப்பதற்கு போதுமான இடவசதி ஏற்படுத்த வேண்டும்.
குற்றத்திற்கு ஏற்ப கைதி களை தனித்தனியாக அடைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதையடுத்து, புதுச்சேரி நீதிபதி சந்திரசேகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்நிலையில் காலாப்பட்டு மத்திய சிறையில் கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு செய்தார்.
சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி, கொலை குற்ற வாளிகள், குண்டாஸ், தொடர் குற்றவாளிகள், மூன்றாம் பாலித்தனவர் மற்றும் இளம் குற்றவாளிகள் போன்றோரை அடைக்க தனி பகுதி, கைதிகளுக்கு ஏற்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டுளனரா என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்த்திருத்த நடவடிக்கைள் குறித்து கேட்டறிந்தார்.
சிறைச்சாலைவளாகத்தில் உள்ள இயற்கை விவசாயம், பேக்கரி, கைத்தறி, ஜெயில் எப்.எம்., கைவினை பொருட்களை பார்வையிட்டார். பின் மரக்கன்றுகள் நட்டு கைதிகளிடம் கலந்துரையாடினார்.
ஆய்வின்போது சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன், தாசில்தார் ஜோதிமணி, ராகேஷ் கண்ணா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தினர்.

