வாய்க்கால் பாதை ஆக்கிரமிப்பு கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
வாய்க்கால் பாதை ஆக்கிரமிப்பு கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
ADDED : ஜூலை 24, 2026 06:52 PM
பாகூர் ஜூலை 25–: பாகூர் மணப்பட்டான் தாங்கல் வாய்க்கால் பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
பாகூர், சித்தேரி தாங்கலில் இருந்து காட்டுக்குப்பம் ஏரி வரை மணப்பட்டான் தாங்கள் பாதையில், சாலை அமைக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், இப்பாதை, ஆக்கிரமிப்புக்குள்ளான நிலையில், முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், கடந்த சில நாட்களுக்கு முன் கவர்னரிடம் மனு அளித்தனர்.
கவர்னர் உத்தரவின் பேரில், கலெக்டர் குலோத்துங்கன் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் ஆக்கிரமிப்பு தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் நில அளவையாளரை கொண்டு அளவீடு செய்து எல்லைகளை உறுதி செய்யவும், ஆக்கிரமிப்பு இருப்பின் அது குறித்து விரிவான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டு சென்றார். ஆய்வின் போது, பாகூர் தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
