sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நுாலகத்தில் கலெக்டர் ஆய்வு 

நுாலகத்தில் கலெக்டர் ஆய்வு 

நுாலகத்தில் கலெக்டர் ஆய்வு 


ADDED : மே 06, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 06:41 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில், உள்ள நுாலகத்தினை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில், கலை பண்பாட்டு துறையின் மூலமாக நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கலெக்டர் குலோத்துங்கன், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர், பார்வையாளர்கள் அமர்ந்து படிப்பதற்கு தேவையான மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போதுமானதாக அமைத்து தர வேண்டும். பழைய புத்தகங்கள் மற்றும் நுால்களை கணினி மயமாக்கி, பராமரித்திடவும், அனைத்து வகையான புதிய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் இருந்திட வேண்டும் என, உத்தரவிட்டார். 

மேலும், கழிப்பறை வசதிகள், சுத்தமான குடிநீர், மின் விசிறிகள் மற்றும் போதிய வெளிச்சம் போன்றவை உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, நுாலகத்தை நன்கு பராமரித்து சுத்தமாக  வைத்துக் கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து எந்த புகார்களும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என, அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us